Saturday, 30 October 2021

ஆதித் திருச்சபை விசுவாசிகளின் நம்பிக்கைகள் - 6

 அவர்கள் தேவ வழி நடத்துதலை நம்பினர்.

(They Believed in God's Leading-  Acts 1:16-23)


வாழ்க்கையில் எடுக்கும்  ஒவ்வொரு முடிவுகளும் மிக முக்கியமானவை. "சிறியது அல்லது பெரியவை", காரியங்கள் எப்படியாக இருந்தாலும்  வாழ்க்கை பயணத்தின் திசைகளை அவைகள் தீர்மானிக்கிறது. 

உதாரணமாக, கல்வி பயிலுகையில் தெரிவு செய்யும் பாடப்பிரிவு, வேலை,  திருமணம், பங்கேற்கும் திருச்சபை, குழந்தைகள் வளர்ப்பு, வசிக்கும் இடம், வீடு ட்டுல், நண்பர்கள், குடும்ப மற்றும் அலுவலக உறவுகளைப் பேணுதல் என இப்படிப் பல காரியங்களில் சரியான முறையில் முடிவுகள் எடுக்க வேண்டியது அவசியமாக இருக்கிறது. இவை வாழ்க்கை பயணத்தின் திசையைத்  தீர்மானிக்கிறது. 

இந்த குதி சீடர்கள் எவ்விதம் சரியான முடிவுகளை எடுத்ர் என நமக்கு  ற்று தருகிறது (அப் 1: 16-23)ஆண்டவரோடு வாழ்ந்த காலத்தில்  முடிவுகளை எடுக்க வேண்டிய தேவை அவர்களுக்கு இல்லை. அவரே வழி நடத்தினார். ஆனால்  இப்பொழுது, அவர்களே முடிவுகளை எடுக்க வேண்டிய  கட்டாயம் ஏற்பட்டுள்ளது

இந்தச் சூழ்நிலையில் அவர்கள் பின்பற்றிய வழி முறைகள் குறித்துத்  தியானிப்போம். 

1. அவர்களை வேதம் வழி நடத்தியது:

யூதாஸுக்கு பதிலாக வேறு ஒருவர் நியமிக்கப்பட வேண்டுமா? எனச் சீடர்கள் ஆலோசனை செய்தனர். 

இதற்கான முடிவை வேதத்தில் எழுதப்பட்டுள்ள இரண்டு சங்கீதங்களை  ஆதாரமாக வைத்து திருத் தூதர் பேதுரு முடிவு எடுத்தார் (சங்கீதம் 69:25/ 109:8). 

இந்த திருப்பாடல்களில் "யூதாஸ் மரணத்தைக் குறித்தும், அவருக்குப் பதிலாக வேறு ஒருவருக்கு அந்த பணி கொடுக்கப் படவேண்டும்" என்றும் தீர்க்க தரிசனமாக எழுதப்பட்டுள்ளது. 

"ஒரு முடிவை எடுக்கும் முன்பாக வேதத்தில் தைக் குறித்து என்ன சொல்ல பட்டுள்ளது" என்று வாசித்துத் தெளிவாகப் புரிந்து கொண்டு முடிவை எடுக்க வேண்டும். 

நவீன வாழ்க்கை முறையில் எழும் சில சந்தேகங்களுக்குத் தேவையான பதில் வேதத்தில் நேரிடையாக இல்லாது இருக்கக்கூடும். ஆனால் பதில்களுக்கான   குறிப்புகள் நிச்சயம் மறைமுகமாக இருக்கும். 

உதாரணமாகப் புகை பிடிக்கக் கூடாது என நேரிடையாக வேதத்தில் எழுதப்படவில்லை. ஆனால் "நமது உடல் கடவுளின் ஆலயம். ஒருவர் தமது உடலைக் கெடுத்தால் இறைவன் அவர் வாழ்வை அழிப்பார்" என்று எழுதப்பட்டுள்ளது. இதிலிருந்து உடலைக் கெடுக்கும் எந்தவித செயலையும் செய்யக் கூடாது எனப் புரிந்து கொள்ள முடியும்

தொலைக்காட்சி அல்லது சமூக ஊடகங்களில் உள்ள பொழுது போக்கும் கேளிக்கை நிகழ்ச்சிகளில் உட்கார்ந்து நேரத்தை வீணடிக்கக்கூடாது என நேரிடையாக எழுதப்படவில்லை. ஆனால் "ரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காரதேஎன எழுதப்பட்டுள்ளது.

வேத வாக்கியங்கள் வாசிப்பது நமது அறிவை தெளிவாக்கும். இருள் சூழ்ந்த இடத்தில் வெளிச்சம் திப்பது போல மனதைக் குழப்பத்திலிருந்து விடுவித்துச்  சரியான முடிவுகளை எடுக்க வழி நடத்தும்.  

இதையே சங்கீதக்காரன் இவ்வாறு பாடுகிறார். 

நீர் என் அறிவை விரிவாக்கும்போது, உம் கட்டளைகள் காட்டும் வழியில் நான் விரைந்து செல்வேன்.

என் காலடிக்கு உம் வசனம் விளக்கு! என் பாதைக்கு ஒளியும் அதுவே!   (திருப்பாடல்கள் 119: 32/105)  

முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன்பாக வேதத்தை வாசித்து தேவ சித்தத்தை உணர்ந்து கொள்ள வேண்டும். வேத வசனங்கள் நம்மைச் சரியான முறையில் வழி நடத்தும். 

2. அவர்களை ஜெபம் வழி நடத்தியது: 

சீடர்கள் புதிய அப்போஸ்தலரைத் தெரிவு செய்யும் முன்பாக ஜெபம் செய்தார்கள்.  ஜெபம் அவர்களை வழி நடத்தியது.    

பின்பு அவர்கள் அனைவரும், "ஆண்டவரே, அனைவரின் உள்ளங்களையும்  அறிபவரே, யூதாசு திருத்தொண்டையும்திருத்தூதுப்பணியையும் விட்டகன்று,தனக்குரிய இடத்தை அடைந்து விட்டான். அந்த யூதாசுக்கு பதிலா யாரைத்  தெரிந்தெடுக்க வேண்டும் என இந்த இருவருள் ஒருவரை எங்களுக்குக்  காண்பியும்என்று  இறைவனிடம் வேண்டிக்கொண்டனர். (அப் 1: 24-25) 

இதைத் தேவ மனிதர் தாவிது மிக நன்றாக அறிந்திருந்தார். அவரது பல பாடல்கள் தேவ வழி நடத்துதலுக்காக ஜெபித்தவை. தேவனை நோக்கி தமது ஆத்துமாவை உயர்த்தினார். கிருபைக்காகக் காத்திருந்தார். கண்கள் கர்த்தரையே  நோக்கிப் பார்த்தது. கர்த்தருக்குப் பிரியமானதை மட்டுமே நிறைவேற்ற விரும்பினார். தேவனிடமிருந்து பதில்களைப் பெற்றுக் கொண்டார். 

அதிகாலையில் உமது கிருபையைக் கண்டடையச் செய்யும். உம்மீது நம்பிக்கை வைத்துள்ளேன்; நான் நடக்க வேண்டிய அந்த வழியை எனக்குக் காட்டியருளும்; ஏனெனில், உம்மை நோக்கி என் உள்ளத்தை  உயர்த்துகின்றேன்.   

உம் திருவுளத்தை நிறைவேற்ற எனக்குக் கற்பித்தருளும்; ஏனெனில், நீரே என் கடவுள்; உமது நல்ல ஆவி என்னைச் செம்மையான வழியில் நடத்துவதாக! (சங்கீதம் 143: 8/10).

ஜெபம் சரியான தீர்மானங்களை எடுக்கும் மன உறுதியை அளிக்கும். 

3. அவர்களைத் தேவ பிரசன்னம் வழி நடத்தியது: 

சீடர்கள் தேவ பிரசன்னத்தில் வழி நடத்தப்பட்ட பல நிகழ்வுகள் அப்போஸ்தல நடபடிகள் நூலில் எழுதப்பட்டுள்ளது. 

தேவ தூதர்கள் வழி நடத்தினார்கள் (அப்: 5:19-20/ 8: 26-38/ 12: 7-11/). தரிசனங்கள் மூலம் வழி நடத்தப்பட்டார்கள் (அப்: 10: 10-48/ 16: 9-10/ 18: 9-10). ஆவியானவர்  வழி நடத்தினார் (அப்: 4: 8-21/ 5: 1-10/ 8: 39/ 13: 1-2)

பல தேவ மனிதர்கள் தேவ பிரசன்னத்தில் வழி நடத்தப்பட்ட சம்பவங்கள் வேதத்தில் கூறப்பட்டுள்ளது. 

உதாரணமாக, ஆபிரகாம் தாம் செல்லும் இடம் இன்னதென்று அறியாமல் புறப்பட்டுச்  சென்றார். கர்த்தர் அவரது வாழ்க்கையின் முழு வரைபடத்தையும் அவருக்குக்  காண்பிக்கவில்லை. ஆனாலும் அவர் தேவனை முழுமையாக விசுவாசித்தார். தேவ பிரசன்னம் அவருடன் இருந்தது. 

அதனால் அவரது வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் தேவ வழி நடத்துதலை அனுபவித்தார். அவர் வாழ்க்கையில் கர்த்தர் வழி நடத்திய ஆச்சரியமான விதங்களை இந்த வசனங்களை வாசித்துத் தெரிந்து கொள்ள முடியும். (ஆதி 12: 1-4/ 12: 7/ 13: 14-18/ 14: 22-24/ 15: 1-21/17: 1- 27/ 21: 9-14/ 22: 1-18/ 24: 2-9/)

சில சமயங்களில் அவர் தனது சொந்த வழியில் முடிவுகளை எடுத்தாலும் அதை அறிக்கையிட்டு மீண்டும் தேவனோடு பயணம் செய்தார் (ஆதி 12: 11-20/ 16: 1-4/ 20:1-14/ )

தேவ பிரசன்னம் தங்களுடன் வரவில்லை என்றால் நாங்கள் இங்கிருந்து புறப்பட்டுச் செல்ல மாட்டோம் என மோசே அறிக்கை செய்தார். இந்த வேத பகுதியை எப்போதும் நாம் நினைவில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.  

அதற்கு ஆண்டவர், "எனது பிரசன்னம் உன்னோடு செல்லும். நான் உனக்கு
இளைப்பாறுதல் அளிப்பேன்" என்று கூற, மோசே அவரிடம், "உமது
பிரசன்னம் கூடவரவில்லையெனில் எங்களை இங்கிருந்து போகச் செய்யாதீர்". (
யாத் 33: 15) என்றார்.

வாழ்க்கையில் நாம் எடுக்கும் முடிவுகளை வேதம் காண்பிக்கும் வழியில் எடுப்பது சிறந்தது. வேதம் நல் வழியைக் காண்பிக்கும். நல் ஆலோசனையை அளிக்கும்.  தேவ சித்தத்தை உணர்ந்து கொள்ள உதவும்.  

ஜெபித்து எடுக்கும் முடிவுகள் மனதில் தேவ சமாதானத்தைத் தரும். மனதை உறுதிப் படுத்தும். அந்த பாதையில் பயணம் செய்யும் தைரியத்தைத் தரும்.  

தேவ பிரசன்னம் எதிர்ப்புகளைக் கண்டு பயப்படாமல் அந்த செயலை  வெற்றிகரமாக நிறைவேற்றி முடிக்கும்  வல்லமையை அளிக்கும். 

வாழ்க்கையின் ஒவ்வொரு முடிவுகளையும் வேதத்தை வாசித்து, ஜெபித்து, தேவ பிரசன்னத்தில் தரித்திருந்து எடுக்க இறைவன் அருள் புரியட்டும். ஆமென். 

Tuesday, 19 October 2021

ஆதித் திருச்சபை விசுவாசிகளின் நம்பிக்கைகள் - 5

அவர்கள் இறை வேண்டுதலை நம்பினர்.

(They Believed in Prayer -  Acts 1:14/25)


ஆதித் திருச்சபை விசுவாசிகளின்  வாழ்க்கையில் ஜெபம் ஒரு இயல்பான செயலாக இருந்தது.   (Prayer is a normal day to day activity). 

ஜெபம் அவர்களது வாழ்வில்   எப்படிப் பின்னிப் பிணைந்து இருந்தது என்பதை அப்போஸ்தல நடபடிகள் நூலில் விளக்கமாக எழுதப்பட்டுள்ளது. 

இந்த நூலின் ஒவ்வொரு அதிகாரத்திலும் ஜெபத்தைக் குறித்து ஒரு குறிப்பு ள்ளது

1. அப் 1: 15-26 : ஆண்டவர் வழி நடத்துதலுக்காக ஜெபித்தார்கள். 

2. அப் 1: 3-1 / 10-9 : ஒவ்வொரு நாளிலும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி ஜெபித்தார்கள். 

3. அப் 4: 24-31 : நன்றி செலுத்தி ஊழியர்களுக்கும், ஊழியங்களுக்காகவும் ஜெபித்தார்கள். 

4. அப் 6:4 : தலைவர்கள் ஜெபம் பண்ணுவதில் உறுதியாகத்  தரித்திருந்தனர். 

5. அப் 7: 59-60 : புனித ஸ்தேவான் தமது மரண தறுவாயிலும், தன்னை கல்லெறிந்த மூர்க்க வெறி கொண்ட மக்களின் மன்னிப்பிற்காக ஜெபம் செய்தார்.

6.  அப் 8: 14-17 : சமாரியர்களும் பரிசுத்த ஆவியானவரைப்   பெற்றுக் கொள்ளும் படி பேதுருவும் யோவானும் அவர்களுக்காக ஜெபித்தார்கள். 

7. அப் 9: 11 : மனமாற்றம் அடைந்த திருத் தூதர் பவுல் ஆண்டவரின் இரக்கத்திற்காக ஜெபம் செய்தார். 

8. அப் 9: 17 : அனனியாவின் ஜெபம் - பவுலின் கண்கள் திறக்கப்பட்டது. 

9. அப் 9: 40 : பேதுரு தபீத்தாள் மரண கட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட  முழங்காலில் நின்று ஜெபித்தார். 

10. அப் 10: 2/30 : கொர்நெலியு - எப்பொழுதும் உபவாசித்து ஜெபிக்கும் தேவ மனிதர். 

11. அப் 11: 18 : புற இனத்தைச் சேர்ந்தவர்களும் சபையில் இணைந்தது குறித்து தேவனை மகிமைப் படுத்தி ஜெபித்தார்கள். 

12. அப் 12: 12 : பேதுருவின் விடுதலைக்காக மாற்குவின் வீட்டில் சபையார் ஜெபித்தார்கள். 

13. அப் 13: 1-3 : சபை உபவாசித்து ஜெபித்தது. ஆவியானவர் மிஷனரி தரிசனம் தந்தார். பவுல், பர்னபா - முதல் மிஷனரி பயணம் துவங்கியது. 

14. அப் 14: 23 : உபவாசித்து ஜெபித்து சபையின் மூப்பர்கள் நியமிக்கப் பட்டார்கள்.          

15. அப் 16: 13-15 : ஆற்றினருகே வழக்கமாய் ஜெபித்தார்கள் - ஐரோப்பா கண்டத்தின் திருச்சபை வாசல் திறந்தது. 

16. அப் 16: 25 : பவுலும் சீலாவும் நடு இரவிலும் ஜெபித்தார்கள். சிறைச்சாலை ஆலயமானது. 

17. அப் 20: 36/21:5 : பவுல் சபை மக்களுடன் முழங்காலில் ஜெபித்து கண்ணீருடன் விடைபெறுதல். 

18. அப் : 27-35 : புயலுக்கு மத்தியில் நம்பிக்கையற்ற சூழலில் பவுலின் நன்றி நிறைந்த ஜெபம். 

19. அப் 28:8  : பவுலின் சுகமளிக்கும் ஜெபம். 

ஜெபம் ஓர் மூச்சுக் காற்று:

ஆதி திருச்சபை விசுவாசிகள் ஜெபத்தில் வாழ்ந்தனர். முடிவுகளை எடுத்தனர்.  சுகமாக்கும்  வரம் செயல்பட்டது. கட்டுகள் அறுந்தது. விடுதலை பெற்றனர். ஊழிய எல்லைகள் விரிவடைந்தது. ஊழியர்கள் எழும்பினர். அபிஷேகம் ஊற்றப்பட்டது. எதிர்ப்புகள் முறிந்தது. அரச சபையிலும் "ஆண்டவர் உயிர்த்தெழுந்தார்" 'எனச் சாட்சி பகரப்பட்டது. 

ஒரு கிறிஸ்தவன்(ள்)  ஆன்மா  பரிசுத்த ஆவியானவர் அருளப்படுவதால் உயிர் பெறுகிறது. இது ஒரு மறுபிறப்பு அனுபவம். 

ஒரு மனிதர் உயிர் வாழக் காற்று தேவை. சுவாசம் இல்லையென்றால் உயிர் பிரிந்து விடும். அது போல மறுபிறப்பு டைந்த ஆவிக்குரிய உள்ளான மனிதர் தொடர்ந்து வாழ்வதற்கு ஜெபம் தேவை. ஜெபம் இல்லையென்றால் ஆவிக்குரிய சரீரம் செத்தது. 

ஆண்டவரது ஜெப வாழ்க்கை நாம் பின்பற்ற வேண்டியது சிறந்த முன்மாதிரி. அவர் அதிகாலையில் தனித்து ஜெபிக்கும் பழக்கம் உடையவர். ஒவ்வொரு செயலையும் ஜெபித்துச் செய்தார். பிதாவின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்கிற நோக்கம் அவர் ஜெபத்தில் வெளிப்பட்டது. 

ஜெபத்தைக் குறித்து ஆண்டவரது சுருக்கமான போதனைகள் மத்தேயு (6:5-15) பகுதியில் உள்ளது. அவை நாம் எவ்விதம் ஜெபிக்க வேண்டும் என கற்றுத் தருகிறது. அவற்றிலிருந்து சில குறிப்புகள் :

1. அந்தரங்கத்தில் ஜெபித்தல் வேண்டும். (Pray in Secret - மத்தேயு 6:5-6)

ஆண்டவர் கற்றுத் தருவது "பொது வெளியில் ஜெபிப்பதற்கு முன்பாக தனித்து தேவ சமூகத்தில் ஜெபத்தில் காத்திருக்க வேண்டும்". (We must pray in secret before we pray in public). 

சபையில் அல்லது பொது வெளியில் அனைவரும் பார்க்கும் வகையில் ஜெபிப்பது தவறு இல்லை. ஆண்டவர் பல சமயங்களில் எல்லோரும் பார்க்கும் வகையில் ஜெபம் செய்துள்ளார். 

எல்லா மனிதருக்கும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும் செய்ய வேண்டும் எனத் திருத் தூதர் பவுலும் திமொத்தேயு வுக்கு புத்தி சொல்கிறார் (1 திமொ 2:1).

ஆனால் தனித்து ஜெபிக்கும் பழக்கம் இல்லாதவர்கள் பொது வெளியில் ஜெபிப்பதற்கு எந்த தகுதியும் கிடையாது. 

வீட்டில் ஜெப அறையில் கதவைப் பூட்டி பிறர் பார்க்காத வகையில் ஜெபியுங்கள் என ஆண்டவர் கற்றுத் தருகிறார். இதன் பொருள் ஜெபம் என்பது பிறர் பார்த்துப் புகழ வேண்டும் எனப் பெருமைக்காகச்   செய்யக்கூடாது. 

2. உண்மையுடன் ஜெபிக்க வேண்டும். (Pray Sincerely மத்தேயு 6:7-8)

இறைவனது குணத்தைக் குறித்து ஆண்டவர் சொல்கிறார்: "கடவுள் அந்தரங்கத்தில் பார்க்கிறவர். ஆனால் எல்லோரும் காணும் வகையில் அவர் பதில் தருபவர்" . 

இது மிகவும் முக்கியமானது. இதன் பொருள் கடவுள் ஜெபத்தில் சொல்லப்படும் வார்த்தைகளை விடச் சொல்பவரது மனப்பான்மையைக்  கவனிக்கிறார். ஜெபம் என்பது உள்ளத்திலிருந்து உண்மையுடன் ஏறெடுக்கப் படவேண்டும். அப்போது கடவுள் அனைவரும் பார்க்கத் தகுந்த வகையில் பதில் தருவார். 

ஆண்டவர் கற்றுத் தரும் மற்றும் ஒரு பாடம் "வீண் வார்த்தைகளில் அலப்பக் கூடாது". அதிகமான வார்த்தைகள் தேவையில்லை. இறைவனுக்கு நமக்கு எது தேவை என்பது நாம் சொல்லாமலே தெரியும். எனவே சுருக்கமாகவும், தெளிவாகவும், உண்மையுடன் ஜெபிக்க வேண்டும். 

 3. The Lord's Prayer (or) The Diciple Prayer Model (மத்தேயு 6: 9-13)

இது "கர்த்தரின் ஜெபம்" எனச் சொல்லப்படுகிறது. உண்மையில் இது "சீடர்களுக்கான ஜெபம்" எனக் கூறுவது மிகப் பொருத்தமாக இருக்கும். 

இது சீடர்கள் எப்படி ஜெபிக்க வேண்டும் என ஆண்டவரால் உதாரணமாகச்  சொல்லிக்  கொடுக்கப்பட்ட ஒரு மாதிரி ஜெபம். 

இதில் எதற்காக ஜெபிக்க வேண்டும், எந்த தேவைகளுக்காக ஜெபிக்க வேண்டும், எப்படி ஜெபிக்க வேண்டும் என்கிற சத்தியம் உள்ளது. 

3.1: எதற்காக ஜெபிக்க வேண்டும் 

"The purpose of prayer is to glorify God's name and to ask for help to accomplish His will on earth". 

"நாம் இப்பூவுலகில் எதற்காகப் படைக்கப்பட்டோம் எனும் இறைவனின் நோக்கத்தை உணர்ந்து, அவரது கிருபையால்  அதைப் பரிபூரணமாக நிறைவேற்றி, அவரது  நாமத்தை மகிமைப் படுத்த வேண்டும்". (Warren W. Wiersbe.) 

இந்த மாதிரி ஜெபத்தின் முதல் மூன்று வேண்டுதல் இதைத்   தெளிவாக கற்றுத் தருகிறது. 

a. இறைவனது பெயர் போற்றப்பட வேண்டும். (God's Name).

b. இறைவனது அரசு வர வேண்டும். (God's Kingdom). 

c. இறைவனது சித்தம் பூமியில் செய்யப்பட வேண்டும். (God's Will). 

3.2. நான் மறைந்து நாமாக வேண்டும். 

இந்த ஜெபம் முழுவதும் பன்மையில் அமைந்துள்ளது. (there are no singular pro noun in this prayer; they are all plural). 

a. எங்களுக்கு வேண்டிய அனுதின ஆகாரத்தை எங்களுக்குத் தந்தருளும். 

b. எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிப்பது போல எங்கள் பாவங்களை எங்களுக்கு மன்னியும்

c . எங்களைச் சோதனைக்கு ட்படப் பண்ணாமல், தீமையிலிருந்து பாதுகாத்து ருளும். 

இதன் பொருள் தனிப்பட்ட தேவைகளை விட அனைத்து தேவ பிள்ளைகளின் தேவைகள், விடுதலை /ஆசீர்வாதம், பாதுகாப்பு இவற்றிற்காக ஜெபிக்க வேண்டும். 

நான் ஒரு  தனிநபர் அல்ல, மாறாகத் திருச்சபை எனும் உலகளாவிய மாபெரும் குடும்பத்தில் ஒரு அங்கமாக  நான் இருக்கிறேன் என்கிற உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும். 

3.3. மன்னிப்பின் மாண்பு  (மத்தேயு 6: 14-15)

14. மற்ற மனிதர் செய்யும் குற்றங்களை நீங்கள் மன்னிப்பீர்களானால் உங்கள் விண்ணகத் தந்தையும் உங்களை மன்னிப்பார்.

15 மற்ற மனிதரை நீங்கள் மன்னிக்காவிடில் உங்கள் தந்தையும் உங்கள் குற்றங்களை மன்னிக்க மாட்டார்

ஆண்டவர் கற்றுத் தந்த ஜெபத்தின் பிற்சேர்க்கையாக (appendix) இந்த இரண்டு வசனங்கள் உள்ளன.  

நமது ஜெபங்கள் கடவுளால் கேட்கப் பட வேண்டும் என்றால், நாம் செய்ய வேண்டிய நிபந்தனை போல இவை காணப்படுகிறது. 

உண்மையில் அவை நிபந்தனை இல்லை. மாறாகக் கடவுள் நமது கொடூரமான பாவங்களை மன்னித்தார். ஆகவே நாம் நமக்கு விரோதமாகப் பிறர் செய்த சிறு பிழைகளை மன்னிக்க வேண்டும் என்கிற மாபெரும் சத்தியத்தை  நாம் வாது தில் மாகப்  பதிய வைத்து கொள்ள வேண்டும் ன்தற்காக சொல்பட்டுள்ளது. 

இந்த சத்தியத்தைப் புரிந்து கொள்ள ஆண்டவர் கற்பித்த "மன்னிக்க மறுத்த பணியாள்" உவமை உதவி செய்திடும். (மத்தேயு 18: 21-35).

ஒரு அரசர் தன்னிடம் வேலை பார்க்கும் பணியாளுக்கு 1,80,000 தெனாரியம் கடன் அளித்தார். (ஒரு தெனாரியம் என்பது ஒரு தொழிலாளியின் ஒரு நாள் கூலிக்கு இணையான ரோம வெள்ளி நாணயம்) 

அவர் திருப்பி செலுத்த வேண்டிய காலம் முடிந்து விட்டது. ஆனால் அவரால் கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. எனவே அரசர் அவன் மனைவி, மக்களோடு அவனுக்குரிய  உடைமைகள்  யாவற்றையும் விற்றுப் பணத்தைத் திருப்பி அடைக்க உத்தரவிட்டார். உடனே அப்பணியாள் அவர் காலில் விழுந்து கெஞ்சி தவணை அளிக்கும்படி வேண்டினான். அரசர் அவனுக்குப் பரிவுடன் இரங்கி அவனது கடன் முழுவதும் தள்ளுபடி செய்து மன்னித்தார். 

அந்த பணியாள் விடுதலை பெற்றதும் தன்னிடம் 100 தெனாரியம் கடன் வாங்கிய மனிதனின் கழுத்தைப் பிடித்து நெரித்து கடனை திருப்பி தா என அவனைக் கடுமையாக நெருக்கினான். 

அவனோ "கொஞ்சம் பொறுத்துக் கொள், நான் திருப்பி தந்து விடுகிறேன்" என்று மிகவும் கெஞ்சிக் கேட்டார். 

ஆனால் இவன் அதற்கு இசையாது கடனை திருப்பி தரும்வரை அவனைச் சிறையில் அடைத்தான். 

இதைக் கேள்விப்பட்ட அரசர் தான் மன்னிப்பு அளித்த அந்த பொல்லாத மனிதன் மேல் கடும் கோபம் அடைந்தார். நான் உனக்கு எவ்வளவு இரக்கம் காண்பித்தேன். அது போல நீயும் இரக்கம் காட்டியிருக்க வேண்டும் அல்லவா? என்று கேட்டார். 

அரசர் கடும் சின்னத்துடன் அந்த பொல்லாத மனிதனை அவன் அனைத்துக் கடனையும் அடைக்கும்வரை வதைப்போரிடம் ஒப்படைத்தார். 

ஆண்டவர் நமது 1,80,000 பாவங்களை நமக்கு மன்னித்திருக்க, நாம் பிறர் நமக்கு விரோதமாகச் செய்த வெறும் 100 தவறுகளை மன்னிக்க வேண்டியது எவ்வளவு கட்டாயம். 

இதைத் தான் ஆண்டவர் நமக்குக் கற்றுத் தருகிறார். 

நாம் நமக்கு எதிராகத் தீங்கு இழைத்தவர்களை மனதார மன்னிக்கும் போது கர்த்தர் நமது ஜெபங்களைப் பிரியமாகக்  கேட்பார். 

ஸ்தேவான் ஜெபித்து போது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பிதாவின் வலதுபுறம்  அமர்ந்திருந்தவர் எழுந்திருந்து அவனை கண்ணோக்கினார். 

நாம் ஜெபிக்கும் போதும் இவ்வாறு ஆண்டவர் ம்மைப் பிரியமுடன்  பார்க்க வேண்டும். 

இவ்விதம் கர்த்தருக்குப் பிரியமாக ஜெபிக்கும் தேவ பிள்ளைகளாக வாழ ஆவியானவர் நமக்கு அருள் புரியட்டும். ஆமென். 

Monday, 18 October 2021

ஆதித் திருச்சபை விசுவாசிகளின் நம்பிக்கைகள் - 4

அவர்கள் ஐக்கியத்தை நம்பினர்.

(They Believed in the Fellowship  -  Acts 1:12)



1. சபை கூட்டுறவு (ஐக்கியம்):

ஆண்டவரை தங்களது சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டவர்கள் ஒன்றாகக் கூடி ஆராதிக்கும் இடம் திருச்சபை. அதுவே ஐக்கியம். அவர்கள் கூடுகை நிகழும் இடம் ஆலயமாக மாறுகிறது. 

ஆதி திருச்சபை விசுவாசிகள் முதலில் எருசலேம் தேவாலயத்தில் நாள்தோறும் கூடி வழிபட்டனர். பின்னர் அவர்கள் தேவாலயத்தில் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. எனவே அவர்கள் தங்கள் வீடுகளில் ஆராதனை செய்யத் தொடங்கினர். வீடுகள் ஆலயமானது. 

ஆலயம் எனும் ஒரு கட்டிடத்திற்குள் கடவுள் வசிப்பது இல்லை. இரண்டு அல்லது மூன்று பேர் எங்கே ஒன்று கூடி ஒருமனதுடன் ஜெபிக்கின்றனரோ, அங்கே அந்த இடத்திற்குக் கடவுள் வருவார் என்பது வாக்குறுதி.

"உங்களுள் இருவர் மண்ணுலகில் தாங்கள் வேண்டும் எதைக் குறித்தும் மனமொத்திருந்தால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தை அதை அவர்களுக்கு அருள்வார். ஏனெனில் இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடியிருக்கின்றார்களோ அங்கே அவர்கள் நடுவில் நான் இருக்கிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" (மத்தேயு 18:19-20).

திருத் தூதர் பவுல் நமது உடல் இறைவனின் ஆலயம் எனக் கூறுகிறார் (1 கொரி 6:19). ஏசாயா தீர்க்கதரிசியும் நமது உள்ளத்தில் ஆண்டவர் வாசம் செய்வதைக் கூறியுள்ளார்.

"உயர்ந்தவரும் உன்னதரும் காலம் கடந்து வாழ்பவரும், "தூயவர்" என்ற பெயரைக் கொண்டவரும் கூறுவது இதுவே; உயர்ந்த தூய இடத்தில் நான் உறைகின்றேன்; நொறுங்கிய, நலிந்த நெஞ்சத்தினரோடும் நான் வாழ்கின்றேன்; நொறுங்கிய உள்ளத்தினரை ஊக்குவிக்கவும் நலிந்த நெஞ்சத்தினரைத் திடப்படுத்தவும் நான் குடியிருக்கின்றேன்" (ஏசாயா 57:15).

அவர்கள் ஐக்கியத்தில் அப்போஸ்தலர்கள் இருந்தனர். ஆண்டவரின் தாயார் மற்றும் சகோதர சகோதரிகளும் இருந்தனர். யூதர்கள், கிரேக்கர்கள், அடிமைகள், சுயாதீனமானவர்கள், ஆண்கள், பெண்கள் எனப் பல தரப்பினரும் இருந்தனர். ஒரு குடும்பமாக வாழ்ந்தனர். 

அவர்கள் பல்வேறு பின்னணி உடையவர்கள். மீனவர் முதல் வரி வசூலிப்பவர் வரை பல தொழில் பின்னணியில் இருந்து வந்தவர்களும் இருந்தனர். எனினும் அவர்களுக்குள் எவ்விதமான வேறுபாடுகளும் காணப்படவில்லை. ஏற்றத் தாழ்வும் இல்லை. யார் பெரியவர் என்ற போட்டி இல்லை. அனைவரும் இணைந்து ஒருமனதாகச் செயல்பட்டனர்.  

இவர்கள் அனைவரையும் ஒன்றாக இனைத்தது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சிந்திய விலையேறப்பெற்ற திரு இரத்தம். 

2.  ஒரு மனம்:

ஆதி திருச்சபை விசுவாசிகளிடம் காணப்பட்ட மற்றுமொரு சிறந்த தன்மை அவர்களிடம் இருந்த "ஒரு மனம்". 

ஆறு முறை அப்போஸ்தல நடபடிகள் நூலில் அவர்கள் ஒரே மனதுடன் செயல் பட்டார்கள் எனத் திரும்பத் திரும்ப வலியுறுத்தி எழுதப்பட்டுள்ளது. 

அப் 1:14/ 2:1/ 2:46/ 4:24/ 5:12/ 15:26.

அவர்கள் ஒரு மனதுடன் ஜெபித்தார்கள். ஜெபங்கள் உடனடியாக கேட்கப்பட்டது. அதற்குத் தேவனிடமிருந்து பதில்களைப் பெற்றுக் கொண்டனர். விசுவாசத்தில் வளர்ந்தனர். 

எங்கு ஒரு மனம் உள்ளதோ அங்கு தான் தேவ பிரசன்னம் இருக்கும். ஒரு சபையின் பலத்தை அதன் எண்ணிக்கை அடிப்படையில் முடிவு செய்யக்கூடாது. எண்ணிக்கை முக்கியமில்லை. ஐக்கியம் தான் முக்கியம். அது ஒற்றுமை உணர்வுடன் செயல்புரியும் தன்மை முக்கியம். 

வேதம் சொல்லும் கணக்கு விசித்திரமானது. 

"ஒரே ஒரு ஆள் ஆயிரம் பேரைத் துரத்துவான். இரண்டு பேர் சேர்ந்தால் பதினாயிரம் பேரை விரட்டி அடிப்பார்கள்". (உபாகமம் 32:30). இது இணைந்து செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்திச் சொல்லப்பட்ட வாக்குறுதி. 

 3. ஆலயம் செல்வது சாலச்சிறந்தது:

ஆண்டவரைப் பணிந்து  தொழுகை செய்வதற்காக ஆலயம் செல்கிறோம். அவ்வாறு இணைந்து ஆராதிப்பது ஒரு மகிழ்ச்சியான அனுபவம். ஆலய ஆராதனையில் தேவனை ஒருமித்து மகிமைப் படுத்தி வணங்குகிறோம். அது நமது உள்ளத்தில் தேவ சமாதானத்தைத்  தருகிறது. 

ஒரு சிறந்த திருச்சபை அதன் ஊழியர்கள் மற்றும் விசுவாசிகளின் ஆவிக்குரிய பண்புகளை வைத்து அளவிடப் பட வேண்டும். மிகப் பிரமாண்டமான கட்டிடங்கள், அதி நவீன இசைக் கருவிகள், மேம்பட்ட தொழில் நுட்பம், அதிக திரள் கூட்டம் இவற்றைக் கொண்டு ஒரு திருச்சபையை மதிப்பிடக் கூடாது. 

"சபை கூடிவருதலை விட்டு விடக் கூடாது. அன்பு செலுத்தவும் நற்செயல்கள் புரியவும் ஒருவரையொருவர் தூண்டியெழுப்ப கருத்தாக இருக்க வேண்டும். ஒருவருக்கொருவர் புத்தி சொல்லி ஊக்குவிக்க வேண்டும். ஏனெனில் இறுதி நாள் நெருங்கி வருவதைக் காண்கிறோமே" என எபிரேயர் நிருபம் அறிவுறுத்துகிறது (எபிரேயர் 10:24-25).

4. விசுவாசிகளிடம் இருக்க வேண்டிய பண்புகள்:

ஆலயத்தில் எவ்விதம் நடந்து கொள்ள வேண்டும் என்று பிரசங்கியின் நூலில் சாலமன் கற்றுத் தருகிறார் (பிரசங்கி 5: 1-5).

1. ஆலயத்திற்குச்  செல்லும் போது விழிப்புடன் இருக்க வேண்டும். மதிகேடரைப் போல வெறும் பலி, காணிக்கை செலுத்திட மட்டும் போகக் கூடாது. அங்குச் சொல்லப்படுகிற வார்த்தைகளின் அர்த்தத்தைப் புரிந்து கொள்ளும் வகையில் கவனமாக உணர்ந்து கேட்க வேண்டும். 

2. ஆலயத்தில் சிந்தித்துப் பார்க்காமல் எதையும் பேசக் கூடாது. கடவுளின் முன்னிலையில் நிற்கிறோம் எனும் உணர்வுடன் மிகச் சுருக்கமாகப் பேச வேண்டும். அதிகம் பேசுவது மூடத்தனம். 

3. மனதில் சிந்தனை செய்து பார்க்காமல் வாக்குக் கொடுக்கக் கூடாது. கடவுளுக்கு எதாவது வாக்கு கொடுத்திருந்தால் அதை நிறைவேற்றுவதில் காலம் தாழ்த்தாமல் செயல் பட வேண்டும். 

ஒரு விசுவாசி ஆலயத்திற்குத்  தொழுகை செய்யச் செல்லும் போது அவர் மனநிலை எப்படி இருக்க வேண்டும் என்று ஆயக்காரன் - பரிசேயன் உவமை வழியாக ஆண்டவர் கற்றுத் தருகிறார் (லூக்கா 18: 9-14).

நமது பக்தி, உபவாசம், காணிக்கை இவற்றால் ஆண்டவரைப்  பிரியப்படுத்தி விட முடியாது. தாழ்மையுடன் தகுதியின்மையை உணர்ந்து தொழுது கொள்ள வேண்டும். ஒரு போதும் பிறரை அற்பமாக எண்ணக் கூடாது. 

ஒரு போதும் ஆலயத்தில் அதிகாரம் மிக்க பொறுப்புகளை அடைய வேண்டும் என ஆசைப் படாதீர்கள். புகழப்பட வேண்டும் என எதிர் பார்த்து செயல் புரியக்கூடாது. முதன்மையான இடத்தில் அமர ஆசைப்படக் கூடாது. நமது திட்டங்கள், அபிலாஷைகளை நிறைவேற்ற வேண்டும் என்று முயற்சி செய்யக் கூடாது. 

5. ஊழியர்களிடம் இருக்க வேண்டிய பண்புகள்:

பவுல் திருச்சபையின் ஊழியர்கள், உதவியாளர் இவர்களது தகுதிகள் குறித்து திமொத்தேயு வுக்கு எழுதிய குறிப்புகள் நல்ல ஊழியர்களை நாம் அடையாளம் காண உதவுகிறது. 

அவர் குறைச் சொல்லுக்கு ஆளாகாமல் இருக்க வேண்டும். தனது குடும்பத்தை நன்கு நடத்த வேண்டும். ஒரு மனைவி உடையவராகவும், அறிவுத்தெளிவு, கட்டுப்பாடு, விருந்தோம்பல், கற்பிக்கும் ஆற்றல் உடையவராகவும் இருக்க வேண்டும். அவர் குடி வெறிக்கும் வன்முறைக்கும் இடங்கொடாது, கனிந்த உள்ளத்தாராய் இருக்க வேண்டும். சண்டையையும் பொருளாசையையும் தவிர்ப்பவராக இருக்க வேண்டும். தமது சொந்த குடும்பத்தை நல்ல முறையில் நடத்தி, தம் பிள்ளைகள் பணிவுடனும் மிகு‌ந்த கண்ணியத்துடனும் வளர ஆவன செய்பவராக இருக்க வேண்டும். 

வேதம் மேலும் இவ்விதமான கேள்வியை முன் வைக்கிறது. 

தமது சொந்த குடும்பத்தை நடத்தத் தெரியாத ஒருவரால், கடவுளின் சபையை எவ்வாறு கவனிக்க முடியும்?  (1 திமொத்தேயு 3: 2-5).

ஆவிக்குரிய வாழ்க்கையில் உறுதியாக வளர்வதற்கு விசுவாசிகளது கூட்டுறவு  மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஒரு நல்ல ஐக்கியத்தில் நாம் இணைந்து செயல்பட வேண்டும்.

ஒரு நல்ல திருச்சபையின் ஐக்கியம் நாம் கிறிஸ்துவில்  நிலைத்திருக்கும் வாழ்க்கை வாழ உதவி செய்கிறது. அது நம்மைத் தவறான உபதேசங்களில் விழுந்து விடாமல் தடுத்துப் பாதுகாக்கும். சீர் செய்யும். ஆவிக்குரிய வாழ்வில் வளர்வதற்கு உறுதுணையாக இருக்கும்.

கர்த்தர் இவ்விதமான நல்ல சபையில், ஐக்கியத்தில் இணைந்து செயல்பட உதவி செய்வாராக. ஆமென்.